search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மணிகண்டன்"

    அ.தி.மு.க. அனைவருக்கும் பாதுகாப்பு இயக்கம் என்பதை மாற்று கட்சியில் இருந்து வரும் சகோதரர்கள் அறிந்து கொண்டனர் என்று அமைச்சர் மணிகண்டன் பேசினார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் செம்படையார் குளம், பெருங்குளம்,வட்டான் வலசை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் பெருங்குளம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் ஜானகிராமன் ஏற்பாட்டில் அமைச்சர் மணிகண்டன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் மணிகண்டன் வரவேற்று சால்வை அணிவித்து அ.தி,மு.க வேட்டிகளை பொங்கல் பரிசாக வழங்கினார்.

    ராமநாதபுரம் மாவட்டம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலிருந்து அ.தி.மு.க. கோட்டையாக உள்ளது. அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வையும் அம்மா கட்டிக்காத்த இந்த பேரியக்கத்தையும் விட்டு உண்மை தொண்டர்கள் யாரும் எந்த மாற்றுக் கட்சிக்கும் செல்லவில்லை.

    அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க. இயக்கத்தில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

    நமது இயக்கத்தை விட்டு அங்கு சென்றவர்கள் இது ரவுடிகளின் கூடாரம் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அண்ணா தி.மு.க.வில் இணைந்து வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அண்ணா தி.மு.க. அனைவருக்கும் பாதுகாப்பு இயக்கம் என்பதை மாற்று கட்சியில் இருந்து வரும் சகோதரர்கள் அறிந்து கொண்டனர். இணையும் நிர்வாகிகள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. ராமநாதபுரத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைந்து உள்ளனர்.

    ஏழை விவசாயி மகனாக பிறந்து இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அம்மாவின் வழியில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி தாலிக்கு தங்கம், பொங்கல் பரிசு ரூபாய் 1,000 என வழங்கியுள்ளார்.

    அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். முதல்வர் பதவி ஆசையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது போன்று கூறி வருகிறார். இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மண்டபம் உள்பட 14 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.
    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 14 பள்ளிகளை சேர்ந்த 2,630 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு மண்டபம் யூனியன் பகுதியில் உள்ள தங்கச்சி மடம், உச்சிப்புளி, வேதாளை, ராமேசுவரம், மண்டபம் முகாம், பாம்பன், கடுக்காய் வலசை, புதுமடம், இருமேனி, ரெட்டையூருணி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், தங்கச்சிமடம் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித யாகப்பா உயர்நிலைப்பள்ளி, வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மாணவ- மாணவிகளின் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக விலையில்லா மடிக் கணினிகள், விலையில்லா சைக்கிள்கள், ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட மாணவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் தமிழ்நாடு அரசு விலையில்லா சைக்கிள் கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 151 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்க திட்டமிடப்பட்டுஉள்ளது. இதில் இதுவரை 2 கட்டங்களாக 12 ஆயிரத்து 498 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக விளங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், தொழிற்பயிற்சி படிக்கும் மாணவர்களுக்கும் என மொத்தம் 15 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க திட்டமிடப்பட்டுஉள்ளது. ஜனவரி மாதம் முதல் மடிக்கணினிகள் வழங்கப்படும். மேலும் ஊரகப்பகுதிகளில் இணைய பயன்பாட்டினை அதிகரிக்கும் நோக்கில் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமாக தமிழகத்தில் உள்ள 12ஆயிரத்து 524 ஊராட்சிகளை இணைய வழியில் ஒருங்கிணைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து சிரமமின்றி இணைய வழியில் பெற்று பயனடைய வாய்ப்பாக அமையும்.

    மாணவ-மாணவிகள் ஒழுக்கத்துடன் கல்வி கற்பதோடு, சமூக அக்கறையுடன் தங்களது எதிர்காலம் குறித்த தீர்க்கமான சிந்தனையை வளர்த்துக்கொண்டு அதனை அடைவதற்கு கடுமையாக உழைப்பதன் மூலம் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமநாதபுரம் பிரேம், மண்டபம் பாலதண்டாயுதபாணி உள்பட அரசு அலுவலர்கள், பள்்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    கஜா புயல் கரை கடந்த நிலையில், மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு நிலையை பாதிக்கின்ற வகையில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். #GajaCyclone
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், தெற்கு கரையூர் கிராமத்தில் உள்ள பல்நோக்கு புகலிட பாதுகாப்பு மையத்தில், கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து அமைச்சர் மணிகண்டன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயல் கரையை கடந்த நேரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்கள் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் என மொத்தம் 2,123 பேர் 18 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு உணவு, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன. மீனவர்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு, படகுகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது, புயல் கரை கடந்த நிலையில், மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு நிலையை பாதிக்கின்ற வகையில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை.

    இயல்புநிலை திரும்பியதையடுத்து, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களில் 2,051 நபர்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

    தெற்கு கரையூர் என்ற கிராமத்தில் உள்ள பல்நோக்கு புகலிட பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தனுஷ்கோடியை பகுதியைச் சார்ந்த 28 குடும்பங்களுக்கு (72 நபர்கள்) சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு மையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களது குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு பாய், வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புயல் பாதிப்புகளைப் பொறுத்த வரை 10 இடங்களில் சாய்ந்திருந்த மரங்கள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. அதேபோல, 7 இடங்களில் சாய்ந்திருந்த மின் கம்பங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு தற்போது மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் புயலின் காரணமாக மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு இல்லை.

    அதேவேளையில், 6 குடிசை வீடுகள் முழுமையாகவும், 7 குடிசை வீடுகள் பகுதியளவிலும், ஒரு காங்கிரீட் வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.

    வீடுகளின் சம்பந்தப்பட்ட உரிமைதாரர்களுக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டர் வீரராகவராவ், வருவாய் கோட்டாட்சியர் சுமன் மற்றும் பலர் உடனிருந்தனர். #GajaCyclone
    தொகுதிப்பக்கம் எட்டிப் பார்க்காத கருணாஸை பற்றி கவலைப்படத்தேவையில்லை என்று ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசினார். #ADMK #TNMinister #Manikandan #Karunas
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், தோட்டா மங்கலம், அஞ்சுகோட்டை, தொண்டி, வட்டாணம் ஆகிய பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடங்களை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்.

    40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் யாரும் வைகையில் இருந்து தண்ணீர் பெற்றுத்தரவில்லை. ஆனால் அம்மா ஆட்சியில் வைகையில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு குறிப்பாக ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளிலெல்லாம் தண்ணீரை நிரப்பி ஏழை, எளிய மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது.

    விவசாயத்திற்காக பெரிய கண்மாய் நிரப்பப்பட்டுள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கிடைக்காத பகுதிகளை தெரிவித்தால் உடனடியாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

    திருவாடானை சட்டமன்ற தொகுதியில் மக்களின் குறைகள் என்ன? மக்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது? என்று கேட்டு அறிய வேண்டிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நம்மிடத்திலே இல்லை.


    அவர் இருந்தும் இல்லாத நிலை உள்ளது. இந்த பக்கம் வரவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டு சென்னையில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

    அ.தி.மு.க.வின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டு தி.மு.க. தலைவர் வீட்டிலே போய் உட்கார்ந்திருக்கிறார்.

    எனவே அவரைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பகுதி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #Manikandan #Karunas
    ராமநாதபுரத்துக்கு வைகை ஆற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட அமைச்சர் மணிகண்டன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் கண்மாய்கள், ஊரணிகள், நீர்நிலைகள் வறண்டு விட்டன. மழை இல்லாததால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் கட்டாந்தரையாக காட்சி அளிக்கின்றன.

    குடிக்கக்கூட தண்ணீருக்காக கஷ்டப்பட்டு வரும் நிலை உள்ளது. நீர்நிலைகள் வறண்டதால் கால்நடைகளும், பறவைகளும் குடிக்க தண்ணீர் இல்லை.

    3 பக்கம் கடலால் சூழப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் பெரும்பாலும் உப்புத் தண்ணீரே கிடைத்து வருகிறது.

    முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதி களிலுள்ள ஆறுகள், கண்மாய், குளங்கள், வரத்து கால்வாய்களில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. மண்மேடுகளால் தண்ணீர் செல்ல முடியாமலும், தேக்க முடியாமலும் மழைநீர் வீணாகி வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கலெக்டர் ஆயிரத்து 100 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகையில் இருந்து திறந்து விட வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    ராமநாதபுரத்திற்கு வைகை தண்ணீர் கிடைக்க அமைச்சர் மணிகண்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது குறித்து அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை உணர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வைகை அணையில் இருந்து 1800 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை வைத்தேன்.

    எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து ஆயிரத்து 800 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்து விட பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசு ஆணை விரைவில் வெளியிடப்பட்டு ராமநாதபுரத்திற்கு விரைவில் வைகை தண்ணீர் வந்தடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 610 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்களை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். #AmmaTwoWheelerScheme

    ராமநாதபுரம்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 610 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்களையும், 7 பயனாளிகளுக்கு வேளாண் எந்திரங்களையும் (டிராக்டர்), 2 பயனாளிகளுக்கு துணி தேய்ப்பு பெட்டிகள் என மொத்தம் 619 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் ஊரக பகுதிகளுக்கு 1,340 வாகனங்களும், நகர்புற பகுதிகளுக்கு 580 வாகனங்களும் என மொத்தம் 1,920 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை இரண்டு கட்டங்களாக 250 மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகள், நகரப் பகுதிகளில் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

    விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கென்ஸி லீமா அமாலினி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயஜோதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜா, வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் காதர் சுல்தான், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உள்பட பலர் கலந்து கொண்டனர். #AmmaTwoWheelerScheme

    ×